Sunday, June 25, 2017

42 வயதில் 16 வயது பெண்ணாக மாறிய ரகசியம்..!!!
தைவானில் வசித்து வரும் 42 வயது Lure Hsu என்ற பெண் தனது வயதைக் காட்டிலும் மிக இளமையாக தோற்றமளிப்பதும் எப்படி என்பது குறித்து அவர் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. 35 வயதான இவரது தங்கை Sharon Hsu சீரியலில் நடித்து வரும் நடிகை ஆவார்.

2015ம் ஆண்டில் நடைபெற்ற ஒருவிழாவில் இவரது தங்கையுடன் இவர் கலந்து கொண்டபோது இவரது வயதை அறிந்து அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர். அதன் பின் அந்த ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில் Lure Hsuவின் 40 வயது பிறந்த நாள் கொண்டாட்டப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகு Lure Hsuயை சிறுமி என்று நினைத்த Sharon Hsuன் ரசிகர்கள் Lure Hsuன் வயதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின்னர் சமூக வலைதளங்களில் இவர் புகழ்பெற தொடங்கினார். இவரது இன்ஸ்டாகிராமில் இவரை 2,30,000 பாலோயர்கள் பின் தொடர ஆரம்பித்திருக்கின்றனர். மேலும், பேஸ்புக்கில் இவரை 3,41,000 பேர் இவரை பின்தொடர ஆரம்பித்திருக்கின்றனர்.

42 வயது ஆனாலும் தோல்களில் எந்தவித சுருக்கமும் இல்லை என்பதாலும், சிறுமி போல காட்சியளிப்பதாலும் இவரது ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். சீனாவின் நாளிதழ் ஒன்றுக்கு Lure Hsu அளித்த பேட்டியில் அதிகம் தண்ணீர் குடிப்பதும், அதிகம் காய்கறி உணவுகளை உட்கொள்வதும், ஆரோக்கியமான உணவு பழக்கமும், வாடிக்கையான உடற்பயிற்சியும் தான் தன் இளமையின் ரகசியம் என்று Lure Hsu சாதாரணமாக கூறுகிறார்.

அதோடு கோக் போன்ற பானங்களை அருந்துவது இல்லை எனவும், தோல் சுருங்காமல் இருக்க அதிக தண்ணீர் குடித்தால் போதும் என்றும், விட்டமின் சி மாத்திரைகளை தினமும் உட்கொள்வதாக தனது இளமை ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார் Lure Hsu.


Facebook.com/sltnews

கொள்கலன் வண்டியில் விபத்து ; பெற்றோல் சேகரிக்க சென்றவர்களில் 120 பேர் பலி ;பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்
பாகிஸ்தானின் கொள்கலன் வண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்குண்டு 120 பேர் பலியாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பஞ்சாப் மாகாணத்தில், பகவ்பூரில் உள்ள வீதியில், அதிவேகமாக சென்ற பெற்றோல் ஏற்றி சென்ற கொள்கலன் வண்டி குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது.


இதனால், பெற்றோல் வீதியில் கொட்டியது. இதனை அங்கிருந்த மக்கள் சேகரித்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் கொள்கலன் தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கி 120 பேர் உடல் கருகி பலியானார்கள். 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Facebook.com/sltnews

தமிழ் மக்களை கடவுளே காப்பாற்ற வேண்டும்! எப்போதும் ஏதும் நடைபெற கூடும்: சீ.வி
தமிழ் மக்களை இனிமேல் கடவுளே காப்பாற்ற வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது உறுதியான ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு வார நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆரம்பத்திலேயே தீர்த்து வைத்திருக்கமுடியும்.

எனினும், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களில் வரவேண்டும் என்பதில் சிலர் குறியாக இருந்தனர். அவர்கள் பேசுவதற்கு அவைத்தலைவர் உறுதுணையாக இருந்தார்.

இந்நிலையில், எவ்வாறு குறித்த பிரச்சினையை ஆரம்பத்திலேயே தீர்த்து வைக்க முடியும். என்னை வெளியேற்ற வேண்டும் என்பதில் சிலர் உறுதியாக இருக்கின்றனர்.

அதற்கான சரியான தருனம் வரும் வரையில் அவர்கள் காத்திருக்கின்றார்கள்.

2013ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் ஒழுகத் தொடங்கிய காலம் முதல் என் மீதான கோபம் சிலர் இடத்தில் வளர்ந்து வந்துள்ளதை அவதானித்து வந்துள்ளேன்.

எனவே, எப்போதும் ஏதும் நடைபெற கூடும் என்பதை எதிர்பார்த்திருந்தேன். பதவி மீது மோகம் இல்லாத காரணத்தினால் வீடு செல்லவும் தயாராகவே இருந்தேன்.

இந்நிலையில், தமிழ் மக்களை இனிமேல் கடவுளே காப்பாற்ற வேண்டும் எனவும், இது உறுதியான ஒன்று" எனவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.


Facebook.com/sltnews

Saturday, June 24, 2017

அண்டை நாடுகளின் நிபந்தனைகளை நிராகரித்தது கட்டார்!
சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகள் தம் மீது விதித்துள்ள நிபந்தனைகள், நடைமுறை ரீதியாக செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு இல்லாதவை என்று கட்டார் நிராகரித்துள்ளது.

கட்டார் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள 13 நிபந்தனைகளும் நியாமானதோ, நிறைவேற்ற சாத்தியமானதோ அல்ல என்று கூறி கட்டார் வெளியுறவு அமைச்சர் அவற்றை நிராகரித்திருக்கிறார்.

சவுதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளான எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைன் ஆகியவை கட்டார் மீது கடுமையான தடைகளை விதித்துள்ளன.

பயங்கரவாதத்திற்கு கட்டார் ஆதரவு அளித்து வருவதாக அவை குற்றஞ்சாட்டி வருக்கின்றன.

பிற நிபந்தனைகளோடு, கட்டார் அரசால் நிதி ஆதரவு வழங்கப்படும் அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடிவிட வேண்டுமென இந்த நாடுகள் நிபந்தனை வைத்துள்ளன.

இந்த நாடுகள் "கருத்து சுதந்திரத்தை தடுக்க" முயல்வதாக அல் ஜசீரா தொலைக்காட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு மேலாக முன்னேப்போதும் இல்லாத வகையில், கட்டார் மீது ராஜீய மற்றும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால், ஈரானும், துருக்கியும் கட்டாருக்கு அதிக அளவிலான உணவு மற்றும் பிற பொருட்கனை வழங்கி வருகின்றன.

பயங்கரவாதத்திற்கு நிதி ஆதரவு அளிப்பது மற்றும் பிராந்திய ஸ்திரமின்மையை ஏற்படுத்துவது போன்ற தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கட்டார் மறுத்துள்ளது.

ஈரானோடு தொடர்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும், துருக்கியின் ஒரு இராணுவ தளத்தை கட்டார் மூடிவிட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கும் இந்த நான்கு நாடுகளும், இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற 10 நாட்கள் காலக்கெடு வழங்கியுள்ளன.

கட்டார் அரசின் பதில்

இந்த நிபந்தனைகைளை அரசு மீளாய்வு செய்து வருகிறது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

கட்டார் மீது தடை விதித்துள்ள நான்கு நாடுகளும் "நியாயமான, நடைமுறைப்படுத்தக்கூடிய" கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவு செயலர் ரெக்ஸ் தில்லர்சன் புதன்கிழமை கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க வெளியுறவு செயலர் இந்த தடைகளை ஏற்படுத்தியுள்ள நாடுகளிடம் நியாயமான, நடைமுறைப்படுத்தக்கூடிய நிபந்தனைகள் அடங்குகிற பட்டியலை உருவாக்க வேண்டுமென தெரிவித்திருக்கிறார்" என்று கட்டார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான அல்-தானியை மேற்கோள்காட்டி அல் ஜசீரா தெரிவித்திருக்கிறது.

இந்த நிபந்தனைகள் மிதமானவையாக, நிறைவேற்றத் தக்கவையாக இருக்க வேண்டுமென பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இவர்களின் வரையறைகளுக்கு ஒத்ததாக இந்த நிபந்தனை பட்டியல் அமையவில்லை" என்று அல்-தானி கூறியுள்ளார்.

கட்டார் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் அனைத்தும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதோடு தொடர்புடையதல்ல என்பதற்கு இந்த நிபந்தனை பட்டியலே சான்று" என்று கூறியிருக்கும் அல்-தானி, "இவை கட்டாரின் இறையாண்மையை கட்டுப்படுத்தி எமது வெளிநாட்டுக் கொள்கையை அடுத்தவர் முடிவு செய்வதாக உள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.

அல் ஜசீரா வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்தவொரு அரசிடம் அல்லது நிர்வாகத்திடம் இருந்தும் வரும் அழுத்தங்களுக்கு தலை வணங்காமல், எமது ஊடகவியல் நடவடிக்கைகளை தொழில்முறையோடு பின்பற்றும் உரிமையை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தடைகளின் பாதிப்பு

தரை வழியாக சவுதி அரேபியாவில் இருந்து வருபவை மற்றும் கடல் வழியாக வரும் சரக்குக் கப்பல்கள் ஐக்கிய அரபு எமிரேட்டில் நிற்பது ஆகிய கட்டாரின் முக்கிய இறக்குமதிப் பாதைகளின் தொடர்பு சீர்குலைந்துள்ளது.

கட்டாரை சுற்றியுள்ள பெரும்பாலான வான்பரப்பு, கட்டாரின் வான்வழி போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.இருப்பினும், சிறிய ஆனால் பணக்கார நாடான கட்டார், மாற்று வழிகளை கண்டுபிடித்து, இதுவரை பொருளாதார சரிவு ஏற்படாமல் தவிர்த்துள்ளது.

நாட்டை விட்டு வெளிறே வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அண்டை நாடுகளில் வாழ்ந்து வரும் கட்டார் மக்கள் அல்லது குடும்பமாக வாழ்வோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பிரச்சனையில் அமெரிக்கா

தங்களுடைய நிபந்தனைகளை வரையறுப்பதற்கு சவுதி அரேபியாவும், பிற நாடுகளும் எடுத்துக்கொண்ட காலம் தொடர்பாக அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பயங்கரவாதத்திற்கு "உயர்நிலை" புரவலர் என்று கட்டாரை குற்றஞ்சாட்டி, அந்த நாடு மீது கடுமையான நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்திருக்கிறார்.

இந்தப் பிரச்சனையில் ஈடுபட்டுள்ள எல்லா அரபு நாடுகளும் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடுகளாகும்.

ஆனால், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க தளம் கட்டாரில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- BBC - Tamil


Facebook.com/sltnews

கொட்டாவ யுவதி கொலை: பொலிஸில் சிக்கினார் ஒருவர்
கொட்டாவயில் இளம் பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் நபரொருவர் கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தரிந்தி ஆலோக்கா என்ற குறித்த இளம் பெண்ணின் சடலம் அவரது வீட்டின் படுக்கை அறையில் இருந்து மீட்கப்பட்டது.

கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலை வியாழக்கிழமை இரவு ஒன்பது மணிக்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Facebook.com/sltnews

மர்மமாக வந்த அதிநவீன ஆடம்பர கார் யாருடையது?
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது வீதியில் சென்ற அதிதிறன் கொண்ட நவீன மோட்டார் வாகனத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

பாடசாலை காலத்தில் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த மாணவர் முன்வரிசை மாணவர்கள் அடிவாங்குவதனை பார்ப்பதற்காக இந்த வாகனத்தில் வந்துள்ளதாக சிலர் பதிவிட்டுள்ளனர்.


சிலர் இது இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவின் வாகனம் என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த கோடி கணக்கிலான வாகனம் யாருடையதென தேடி பார்க்கும் போது இது யுஷ்ரி என நபருக்கு சொந்தமான வாகனம் என தெரியவந்துள்ளது.

முதலில் இந்த வாகனம் கறுப்பு நிறத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் அதன் நிறம் மாற்றப்பட்டுள்ளது. கொழும்பிற்கு அருகில் உள்ள பகுதிகளில் இந்த காரினை பலர் பார்த்திருக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.


Facebook.com/sltnews

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் - மாவை அவசர சந்திப்பு

வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கிடையில் அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்று உள்ளது.

குறித்த கலந்துரையாடலானது தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை ஐந்து மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை இந்த கலந்துரையாடலில் அண்மையில் ஏற்பட்ட வடமாகாணசபை குழப்பங்கள் தொடர்பில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.அரசியல் ரீதியாக குழப்ப சூழ்நிலை நீடித்திருந்த நிலையில் வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கிடையில் சிலர் முறுகலை ஏற்படுத்த முயன்றனர்.

ஆனால் இரு தலைவர்களும் குழப்பமான சூழ்நிலையை பொறுமையாக கையாண்டதுடன், அமைதியாக இருந்தனர்.இந்த சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பானது, எதிர்காலத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, குழப்பகரமான கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளியினை வைக்கும் எனவும் யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது, எதிர்வரும் காலத்தில் வடமாகாணசபை நடைமுறை மற்றும் அமைச்சர்களின் நியமனங்கள் தொடர்பில் இருவரும் மனம் விட்டு கலந்துரையாடியிருக்க வாய்ப்பிருப்பதுடன், உள்ளூராட்சி தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடியிருக்கலாம் என எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Facebook.com/sltnews

Friday, June 23, 2017

நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் தான்தான் பிரித்தானிய இளவரசி டயானாவைக் கொன்றேன் என பிரித்தானிய உளவு அமைப்பின் முன்னாள் முகவரான ஜோன் ஹோப்கின்ஸ் (agent john hopkins) தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பணிக்காலத்தில் பத்திரிகையாளர்கள்,அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரை கொன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரணப்படுக்கையில் இருக்கும் தான் உண்மைகளை சொல்லாத வரை தனது உயிர் பிரியாது என ஜோன் ஹோப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த டயானா பிரித்தானிய இளவரசர் சார்லஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வில்லியம், ஹரி என இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

20 ஆண்டுகளுக்கு மேல் மர்மமாகவே இருக்கும் இந்த மரணம் குறித்தே ஜோன் ஹோப்கின்ஸ் தற்போது மனம் திறந்துள்ளார்.

மரணப் படுக்கையில் உள்ள அவர் டயானா மரணம் உள்பட 1973ம் ஆண்டு முதல் 1999 வரை இங்கிலாந்தில் நடத்தப்பட்ட 23 கொலைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

டயானா மிகவும் அழகான பெண் என்பதோடு, இளகிய மனம் படைத்தவர். ஆனால் அவர் இளவரசர் சார்லஸை விவாகரத்து செய்ய முடிவு செய்தது அரச குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனவும் அத்துடன் டயானா அரச குடும்ப ரகசியங்கள் பலவற்றையும் தெரிந்து வைத்திருந்தார் எனவும் இதனால் அவரைக் கொல்ல வேண்டும் என பிரித்தானிய அரச குடும்பத்தில் இருந்து நேரடி உத்தரவு வந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இளவரசர் பிலிப்பே இந்த உத்தரவை பிறப்பித்தார் எனவும் இதனை தான் நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் செய்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Facebook.com/sltnews

புலிகளைப் பற்றி சுமந்திரன்
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளினால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான உண்மைகளை தெரிவித்தால் தம்மை தேசத்துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் இவை குறித்து வாய்திறப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், "புலிகளினால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இது முற்றிலும் உண்மையானது. எமது மக்களுக்கும் அது நன்றாகவே தெரியும். அதனை யாராலும் மறுக்க முடியாது. உண்மைகள் வெளிகொண்டு வரப்படவேண்டியது மிகவும் அவசியமானது.

இதன் மூலமே நல்லிணக்கத்தை நோக்கிய செயற்பாடுகளை அர்த்தமுள்ளதாக்க முடியும். காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் படையினரால் மாத்திரம் இடம்பெறவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தமிழ் ஆயுத குழுக்களுக்கும் தொடர்பிருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.

காணாமல் போனவர்கள் தடுப்பு காவலில் இல்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். அல்லது அனைவரும் உயிரிழந்துவிட்டார்கள் என அறிக்கை விடுவது போதுமான ஒன்றல்ல.

இது முறையாக அமையாது. பாதுகாப்பு தரப்பனர்களிடம் சரணடைந்த பலர் காணாமல் போயுள்ளனர். எனவே, அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பினர்களும் இந்த விடயம் தொடர்பில் கட்டாயம் பொறுப்பு கூறவேண்டும்.

நாட்டில் நீண்டகாலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக காணாமல் போக செய்யப்பட்ட சம்பவங்களுக்கு ஏனைய தரப்பினர்களும் பொறுப்பு கூறவேண்டும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Facebook.com/sltnews

அதிவேக பாதை பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு
கொழும்பு அதிவேக பாதையில் பயணிக்கும் பஸ்களின் கட்டணங்களை ஜூலை 1 முதல் அதிகரிக்க தனியார் போக்குவரத்து சங்கம் முடிவு செய்துள்ளது.

இதன்படி,

மகரகம - காலிக்கான கட்டணம் ரூ.410, மகரகம – மாத்தறைக்கான கட்டணம் ரூ.500, கடுவெல - மாத்தறைக்கான கட்டணம் ரூ.520, கொழும்பு – மாத்தறைக்கான கட்டணம் ரூ.530 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டணங்கள் அதிகரித்தமையைத் தொடர்ந்தே அதிவேக பாதை பஸ் கட்டணங்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Facebook.com/sltnews

கைத்தொலைபேசி பாவனையாளர்களே! கவனம்
இருபத்தெட்டு வயதான ஜெஹான் பெரேராவின் கைத்தொலைபேசிக்கு சில தினங்களுக்கு முன்னர் அழைப்பொன்று கிடைத்துள்ளது. அது வெளிநாட்டிலிருந்து வந்த அழைப்பாகும்.

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் தொலைபேசி மணி ஒருமுறை மாத்திரம் ஒலித்து துண்டிக்கப்பட்டதாகும். அதன் வெளிநாட்டு குறியீடு+1(797) என காணப்பட்டுள்ளது. அந்த இலக்கக் குறியீடு டொமினிக் இராச்சியத்துக்குரியது.

அங்கிருநது தனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த ஒருவருமே இல்லை என உணர்ந்தார். அவர் அந்த இலக்கத்துக்கு மீண்டும் அழைப்பை ஏற்படுத்த முயற்சி செய்யவில்லை.

இவ்விடயம் அவர் முன்பின் அறியாத இலக்கத்திலிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்தது குறித்து செய்த முறைப்பாடு காரணமாகவே தெரிய வந்தது.

அவரைப் போன்று இந்நாட்டில் பலர் இந்நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளார்கள். சிலர் அதுகுறித்து முறைப்பாடுகளையும் செய்துள்ளார்கள்.

அவ்வாறு கிடைத்த முறைப்பாடுகள் அனைத்திலும் அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்தே அழைப்புகள் அனைத்தும் கிடைக்கப்பெற்றிருந்தன. தொலைபேசி மணியும் ஒரு முறையே ஒலித்துள்ளது.

ஒரு தடவை மாத்திரம் ஒலித்து தொல்லை செய்யும் இவ்வழைப்பு ‘வன் ரிங் ஸ்கேம்’ () என அழைக்கப்படுகின்றது.

இந்த தொல்லை தரும் அழைப்புக் குறித்து பொது மக்கள் அறிந்திருக்க வேண்டுமென தொலைத் தொடர்பு சேவையில் பணியாற்றும் நிபுணர் கூறுகின்றார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கை கணனி அவசர நடவடிக்கை குழுவின் தகவல் பாதுகாப்பு அதிகாரி ரொஷான் சந்திரகுப்த மேற்குறித்த தொலைபேசி அழைப்பு மோசடியான அழைப்பென்று குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான அழைப்புகள் தொலைபேசி உரிமையாளரின் ஆவலைத் தூண்டுவதாக அமையும். ஆனால் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதால் கட்டணத்துக்காக சில வேளைகளில் 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக கட்டணம் செலவானதாக சிலர் தெரிவிக்கின்றார்கள்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியொன்றில் இவ்வாறான சூழ்ச்சியில் சிக்கும் கைத்தொலைபேசி உரிமையாளர்கள் தொலைபேசி இணைப்புக்கு மாத்திரம் 19.95 அமெரிக்க டொலரை செலவிடுவதாகவும் அதைவிட உரையாடல் இடம்பெறும் காலத்திற்காக 9 அமெரிக்க டொலரை செலவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உங்களது அந்த அழைப்பினூடாக மோசடியாளர்கள் பெரும் பணம் ஈட்டுவதை நீங்கள் அறிவீர்களா? இங்கு நடைபெறுவது என்னவென்றால் நீங்கள் அழைப்பினை ஏற்படுத்த வசதி செய்து தரும் தொலைபேசி நிறுவனத்திடமிருந்து தரகுப் பணத்தை அவர்கள் பெறுவதாகும்.

சூழ்ச்சிக்கு உள்ளாகுபவர்கள் செலவிட்ட பெரும் தொகைப் பணத்தை எங்கேயும் அவர்களால் மீளப் பெற முடியாது. அது சட்டவிரோதமான கொடுக்கல் என்று எங்கும் விவாதிக்க இடமில்லை.

அப்போது அவர்கள் ஏன் அவ்வாறான அழைப்பினை ஏற்படுத்துவீர்கள் என்றே விவாதம் செய்வார்கள்.சில வேளைகளில் உங்களுக்கு தெரியாத இலக்கங்களில் இருந்து குறுஞ் செய்திகள் கிடைக்கக் கூடும்.

அவ்வாறான செய்திகள் அநேகமானவற்றில் ‘தயவு செய்து விரைவில் மீண்டும் அழையுங்கள்’ என குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறான குறுஞ் செய்திகளுக்கு பதில் அளிக்கும்போது மேலே குறிப்பிட்ட விதமே அனைத்தும் இடம்பெறும்.

மோசடியான அழைப்புகள் எமது நாட்டுக்கு எந்த நாட்டிலிருந்து கிடைக்கின்றன? அவற்றின் இலக்கக் குறியீடுகள் என்ன என்பது தற்போது அறியப்பட்டுள்ளது.

அதன்படி புரூண்டி, மலாவி, பாகிஸ்தான் மற்றும் பெலரூசியா இராச்சியங்கள் மற்றும் மேற்கிந்திய திவுகளிலிருந்துமே மோசடியான அழைப்புகள் கிடைத்துள்ளன.

268, 809,876,254 மற்றும் 473 என்னும் இலக்க குறியீட்டுகளிலிருந்து கிடைக்கும் அழைப்புகள் மோசடியானவை என அறியப்பட்டுள்ளது.

இதைத் தவிர அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு இராச்சியத்திலிருந்தும் அழைப்புகள் கிடைத்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எமது நாட்டு கைத்தொலைபேசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இந்த நிலைமையிலிருந்து பாவனையாளர்களை பாதுகாக்க இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

மோசடியான அழைப்பு என கருதும் அழைப்புகளைத் தடுத்து தனது பாவனையாளர்களை பாதுகாக்க கைத்தொலைபேசிச் சேவைகளை வழங்கும் இந்நாட்டு இரண்டு தனியார் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இவ்வாறான மோசடியான உபாயங்களிலிருந்து தப்புவதற்கு கைத்தொலைபேசி பாவனையாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அவ்வாறான அழைப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும்.

தான் இதுவரை அறியாத சர்வதேச தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்பொன்று வந்து தவிர்க்கப்பட்டிருந்தால் அந்த இலக்கத்துக்கு மீண்டும் அழைப்பை ஏற்படுத்த வேண்டாமென தொலைதொடர்பு துறையைச் சேர்ந்த நிபுணர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.


Facebook.com/sltnews

பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுவிப்பு குறித்து ஆலோசித்து முடிவு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இந்நிலையில், பேரறிவாளனை பரோலில் விடுவிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

ஆனால், அவரது பரோல் மனுவை வேலூர் சிறை கண்காணிப்பாளர் நிராகரித்து விட்டார். இதையடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.


இந்நிலையில், இந்த விவகாரத்தை அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கையில் எடுத்துள்ளனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிப்பது குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அவர்கள் இன்று சந்தித்தனர்.

மேலும், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தார்.

இதனிடையே, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து முடிவெடுக்கும் என்று கூறினார்.
Facebook.com/sltnews

மைத்திரியின் மகன் இப்படிப் பட்டவரா...
அண்மையில் தென்னிலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பல ஆயிரம் குடும்பங்கள் தமது உடமைகளை இழந்துள்ளனர்.

இந்த அனர்த்தம் காரணமாக வீட்டினை இழந்த சிறுமி ஒருவரின் கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன வீடொன்றை நிர்மாணித்து கொடுக்க உறுதியளித்திருந்தார்.

அதற்கமைய இரத்தினபுரி, அயகம, பண்கடுகதே தோட்டத்தை சேர்ந்த தெவ்மி என்ற மாணவிக்கு வீடு நிர்மாணிப்பதற்கான பொருத்தமான இடம் ஒன்றை தஹாம் சிறிசேன தெரிவு செய்தார்.

வாக்குறுதியளித்து ஒரு வார காலம் நிறைவடைவதற்கு முன்னர் சிறுமிக்கான வீட்டை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டும் நடவடிக்கையினை நேற்று காலை 10.15 என்ற சுபநேரத்தில் மேற்கொண்டுள்ளார்.

அடுத்து வரும் 3 மாதங்களுக்குள் வீட்டை நிர்மாணித்து முடிப்பதற்கு தஹாம் சிறிசேன திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பகுதியில் உள்ள விகாரையின் தேரர் ஒருவரினால் வீட்டினை நிர்மாணிப்பதற்காக இடம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Facebook.com/sltnews

இலங்கையின் பல பகுதிகளில் இன்று முதல் அடைமழை
இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய தினம் தென்மேற்கு மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

சில இடங்களில் விசேடமாக கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னலினால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.


Facebook.com/sltnews

Thursday, June 22, 2017

பூமியைத் தாக்கவரும் விண்கல்லினால் ஆபத்து! லண்டன் விஞ்ஞானிகள் எச்சரிக்கை
மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியைத் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பூமிக்கு அருகே பல விண்கற்கள் கடந்தவாறே இருக்கும். எனினும் அவை மூலமாக பூமிக்கு ஆபத்து ஏற்படும் சாத்தியக் கூறுகள் குறைவு. இந்த விண்கற்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வுகளை தொடர்ந்து கொண்டே வருகின்றனர்.


இந்த நிலையில் பூமியை நோக்கி பாரிய விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாகவும், அது பூமியில் மோதுவதற்கு வாய்ப்பு உண்டு எனவும் தற்போது லண்டன் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்த விண்கல் நிச்சயமாக பூமியைத் தாக்கும் வாய்ப்பு உண்டு. எனினும் அது எப்போது நடக்கும் என்பது தற்போது கணக்கிடப்பட்டுக் கொண்டு வருகின்றது என லண்டனிலுள்ள பெல்பாஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் (ஆய்வாளர்) ஆலன் பிட்ஸ்சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பூமியில் தாக்குதல் நடத்தப் போகும் விண்கல்லின் அளவு பற்றி தெளிவாக கணிப்பிட முடியவில்லை எனினும் சைபீரியாவில் விழுந்ததை விடவும் இது பெரிதாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதன் தாக்கம் காரணமாக பல நகரங்கள் முற்றாக அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் லண்டன் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச விண்கல் தினத்தன்று இந்த புதிய விண்கல் தொடர்பில் விவாதிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் நேரலையில் மக்களின் சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பூமியைச் சுற்றிலும் சுமார் 1800 இற்கும் அதிகமான விண்கற்கள் சுற்றிவருகின்றன. அவற்றினை தொடர்ந்தும் விஞ்ஞானிகள் அவதானித்தவாறே இருக்கின்றனர்.

இவை பூமியை நெருங்கி வரும் போதே அதன் தாக்குதலுக்கு இலக்காகும் இடங்கள் அடையாளப்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Facebook.com/sltnews

முழங்காவில் பகுதியில் பதற்றம்!! பொலிஸ்நிலையம் மக்களால் முற்றுகை
சுமார் முந்நூறுக்கும் மேற்ப்பட்ட கிராமமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக எமது கிளிநொச்சிப் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


கடந்த 17 ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீதிக்கு வந்த பதின்மூன்று வயதான அ.அபினேஸ் என்ற சிறுவனை மன்னார் பகுதியில் இருந்து வந்த கார் மோதிவிட்டு விபத்தையடுத்து கார் தப்பியோட்டிருந்தது குறித்த விபத்தில் காயமடைந்த சிறுவன் கோமா நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நான்குமணிளவில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துத் தொடர்பில் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாட்டு செய்யப்பட்டிருந்ததுடன் தப்பி ஓடிய காரின் ஒரு இலக்கத்தகடு வீழ்ந்த நிலையில் அதன் இலக்கமும் பொலிஸாரிற்கு வழங்கப்பட்டிருந்தது எனினும் பொலிசாரால் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி முந்நூறுக்கும் மேற்ப்பட்ட கிராமமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை முற்றுகை இட்டனர்.

அதனை அடுத்து அங்கு வருகைதந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தேக நபரை கைதுசெய்யும் வேலைத்திட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளதாகவும் இன்று சந்தேகநபர் கட்டாயம் கைது செய்யப்பட உள்ளார். நாளை எமது பொலிஸ் நிலைய கூட்டினுள் அவரைக் காணமுடியும் என அவரால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக தற்போது முற்றுகை கைவிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.


Facebook.com/sltnews

அனைவரது கருத்துக்களையும் உடைத்தெறிந்தது இன்றைய வடமாகாண சபை அமர்வு
முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் கூட்டப்பட்ட வடமாகாணசபையின் 97ஆம் அமர்வில் அவைத் தலைவர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு புதிய சர்ச்சைகள் உருவாகும் என கருத்துக்கள் வெளியான நிலையில் அந்த கருத்துக்களுக்கு மாறாக அமர்வு மிகவும் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது.

கடந்த 14ஆம் திகதி முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று (21ஆம் திகதி) வரை பல்வேறு போராட்டங்கள் மற்றும் சர்ச்சைகள் எழுந்திருந்தன.


இந்த சர்ச்சைகளுக்கு சமரசம் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் வடமாகாண சபையின் 97ஆம் அமர்வு கூட்டப்பட்டது.

இந்த அமர்வில் பல புதிய சர்ச்சைகள் உருவாகும் என மக்கள் மத்தியில் கருத்துக்கள் உலாவியது.

குறிப்பாக அவைத்தலைவர் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்பித்த நிலையில் அவைத்தலைவர் பதவி நீக்கப்படுவாரா என்பது உட்பட பல கருத்துக்கள் நிலவியது.

எனினும் இன்றைய அமர்வு மிக அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

இன்றைய அமர்வில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பின்னர்கள் தமக்குள் சாதாரணமாக பேசிக் கொண்டதையும் அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரையில் பாரிய பிரச்சினைகள் நடந்தமை தொடர்பான ஒரு அறிகுறி கூட சபையில் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Facebook.com/sltnews

அடுத்த விசாரணை சத்தியலிங்கம், டெனிஸ்வரனின் அமைச்சு மீது மட்டுமே! முதலமைச்சர்
புதிதாக அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழுவானது சத்தியலிங்கம் மற்றும் டெனிஸ்வரரின் அமைச்சுக்கள் மீது மட்டுமே விசாரணைகளை நடத்தும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனின் அமைச்சுக்கள் மீது மட்டுமே விசாரணைகளை நடத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடக்கு மாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களுக்கு பொருத்தமானவர்களை நியமிப்பதற்கு அனைத்து உறுப்பினர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


Facebook.com/sltnews

Wednesday, June 21, 2017

சம்மந்தர், விக்னேஸ்வரன் சமரச உடன்பாடு...?
மக்களின் உரிமங்களைச் சூறையாடிய கிரிமினல்களை சட்டநடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திடம் ஒப்படைக்காமல் சமரசம் செய்கின்றார்களாம் சமரசம்.

ரொம்பவும் வெட்கப்படவேண்டிய விடயம். இந்த சமரசம் தவறுகளை ஒருவகையில் நியாயப்படுத்தி அதனைத் தொடருங்கள் என்று ஏந்த கூச்சமும் இன்றி அனுமதி வழங்கிய சமரசம். ஒரே வர்க்கத்தைச் சேர்ந்த இரு அணியினர் இடையே ஏற்பட்ட உடன்பாடு. மக்கள் நலன்களை முழுமையாக பின்தள்ளி தமது இஷ்டத்திற்கு மக்கள் பணங்களை வளங்களை தவறான வழியில் கையாடல் செய்த குற்றங்களை மக்களே அனுமதிக்க வேண்டும் என்ற ஏதேச்சாகராமான செயற்பாடு. அறம் இங்கு செய்துவிட்டது இதற்கு வேறு, மதத் தலைவர்கள் சமரம் வீசி ஆசீர்வாதம் வழங்கிய செயற்பாடுகள். இதற்கு சமரசம் என்று பெயர் வேறு. தூ.... கேடு கெட்ட செயற்பாடு.

மூன்று வருடங்களாக மக்களுக்காக புலப்படும் வகையில் எந்த செயற்பாடுகளையும் செய்யாத இவர்களின் செயற்பாடுகளை என்னவென்று சொல்வது. தம்மீது குற்றச்சாட்டுகள் மக்கள் பொது மன்றத்தில் ஏற்பட்ட போது தமது 'தூய்மை' யை நிரூபிக்க பதவிகளைத் துறந்திருக்க வேண்டும் அமைச்சர் அவை. செய்யவில்லை சரி விசாரணைக் கமிசன் என்று ஒன்று உருவாக்கப்பட்டதும் அவ்வாறு நிச்சயம் செய்திருக்கவேண்டும் சுயமாக. அவர்கள் சுயமாக செய்யாவிடத்து அழுத்தங்கள் மூலம் அவ் நிலமையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மாறாக அவ்வாறு செய்யத் தேவையில்லை என்று நியாயங்களை கூறியவர்களே இவர்கள். நம்பிக்கை தரும் நிகழ்வாக குற்றம் நிரூபிக்கப்படவும் சாட்சியங்கள் போதவில்லை என்றும் இருவர் தப்பிக்க இதன் பின்பாவது அமைச்சர் அவையினர் பெட்டிகளை தூக்கிகொண்டு கழி சாப்பிட தயார் நிலையில் இருந்திருக்க வேண்டும் (பின்பு சிறை மீண்டதும் சிறை மீண்ட செம்மல்கள் என்று கவிராயர் காசியானந்தனைக் கொண்டு பாட வைத்திருக்கலாம்...?).

தான் தூய்மையானவன் என்று தலமை அமைச்சர் தன்னை தவறுகளில் இருந்து தனித்துக் காட்ட முற்பட நம்பிக்கையில்லாப் பிரேரணை என்று மறு தரப்பு மிரட்ட எல்லாம் பாகம் ஒன்று, இரண்டு, மூன்று என்று சிலதினங்கள் நாடகங்கள் அரங்கேறி யாழ்பாணத்திற்குள் இருந்து கொண்டே அதுவும் கூட்டமைப்பிற்குள்ளேயே கடிதப் போக்குவரத்து. கணணி உலகில் 'பட்டானை' தட்டினால் கணத்தில் செய்திகள் பறக்கும் காலத்தில் கடிதப் போக்குவரத்தாம் மூத்தவர் இருவரிடமும் வாகனம் இல்லையோ....? நேரில் சென்று கதைக்க. சமரசங்கள், சுற்றி நிற்பவர்கள் சாமரைகள் எல்லாம் வீச விட்டுக் கொடுத்து சமரசம் என்று ஒருவரை ஒருவர் காப்பாற்றும் களவாணி வேலைகள் இவை.

தூ.... வெட்கமாக இல்லையா உங்களுக்கு...? தீக்குளித்து (தீக்குளித்தாலும் அழுக்கு நீங்காது அவ்வளவு அழுக்கு இலகுவில் நீங்காது என்பது வேறு விடயம்) உங்கள் தூய்மையை நிரூபிக்க வேண்டாம்...? மனச்சாட்சிப்படி(எப்போதுதான் அப்படி செயற்பட்டீர்கள்) நடக்கவும் வேண்டாம்....? குற்றவாளிகள் இதற்கு தலமை தாங்கிய நானும் இதற்கு காரணமாக இருந்துவிட்டேன் என்று நீதிபதி என்ற பட்டத்திற்கு மதிப்பளித்து அமைச்சர் அவை தலைவர் தலமையில் சகலரும் இராஜினமா செய்யுங்கள். சட்டம் தனது வேலையை செய்யட்டும். அப்படி நீங்கள் செய்யாவிடின் மக்களே! உங்கள் போராட்டங்களை இவர்களுக்கு எதிராகவே முதலில் ஆரம்பியுங்கள். நாம் எவ்வளவு காலம்தான் 'எம்மவர்..?' களாலேயே எமாற்றப்பட்டுக் கொண்டிருப்பது?

இந்த சமரச உடன்பாட்டிற்கு வலு சேர்க்கும் செயற்பாட்டில் ஈடுபடும் முன்னாள் போராளிகள் குழுத் தலைவர்களின் நிலைப்பாடும் நம்பிக்கை தரும் செயற்பாடுகளாக தெரியவில்லை 'கூட்டமை'ப்பாக நின்று பதவிகளை தக்க வைத்திருக்கும் அணுகு முறையாகவே இது தென்படுகின்றது


Facebook.com/sltnews

வடமாகாண சபையின் ஆயுள்காலம் நிறைவடையவுள்ளது: றெஜினோல்ட் குரே
வடமாகாணத்தில் ஜனநாயக மேடை விளையாட்டு நிறைவடைந்திருப்பதாக கூறியிருக்கும் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வடமாகாண சபையின் ஆயுள் காலம் நிறைவடைய உள்ள நிலையில் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மாகாண சபை உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

வடமாகாண விவசாய மற்றும் கல்வி ஆகிய அமைச்சு துறைகளை பொறுப்பேற்ற முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம் ஆளுநர் றெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதன் நிறைவில் ஊடகங்களுக்கு ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

வடமாகாண சபையின் ஆயுள்காலம் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும்படி கேட்டிருக்கின்றேன்.

மேலும் வடமாகாண ஜனநாயக விளையாட்டு நிறைவடைந்திருக்கின்றது. இந்த விடயத்தை நான் மிக உன்னிப்பாக அவதானித்து வந்திருக்கிறேன்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஜனநாயகத்தின்படி இந்த விடயத்தில் அநாவசிய தலையீடுகளை நான் செய்திருக்கவில்லை.

தேசியளவில் உள்ள பிரச்சினைகளுக்கும் ஜனநாயக வழியில் தீர்வுகள் காணப்பட வேண்டும். இந்த விடயம் ஜனநாயக வழியில் தீர்க்கப்பட்டதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என ஆளுநர் கூறியுள்ளார்.


Facebook.com/sltnews