தமிழர்களால் ஆட்சி செய்யப்பட்ட இலங்கை: அரசியல் ஆய்வாளர் தகவல்!

பௌத்தரான ஆரியர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே தமிழ் மொழி பேசுகின்ற திராவிட இனங்கள் வாழ்ந்து வந்தன என்பதற்கான தொல்லியல் சான்றுதழ்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவைகள் மறைக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு பிரஜைகள் முன்னணி தலைவரும் அரசியல் ஆய்வாளருமான வி.கமலதாஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் நேற்று (கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“யுத்தத்தின் பின்னர் நாட்டை மீளக்கட்டியெழுப்பும் முன்மொழிவுகள் தொடர்பில் அரசியல் கட்சிகள், சமயம் சார்ந்தவர்கள் மற்றும் புத்திஜீவிகள் என பலதரப்பினரும் கருத்துக்களை முன்வைத்து வைத்திருந்தார்கள்.

கடந்த வருட இறுதி வரை தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் பல எதிர்பார்ப்புக்களுடன் இருந்தார்கள். ஆனாலும் இந்த நல்லாட்சி அரசும் தமிழ் மக்களை ஏமாற்றுவது போலவே நடந்தது.

சிறுபானமை மக்கள் சமஷ்டி ஆட்சி கிடைக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். ஆனால் இன்று இனவாத ரீதியில் முஸ்லிம்களுக்க ஒரு அலகு தமிழர்களுக்க ஒரு அலகு சிங்களவர்களுக்கு ஒரு அலகு என கூறப்படுகின்றது.

இந்த நிலையில், அரசாங்கம் எந்தவிதமான தீர்வையம் முன்வைக்கவில்லை. யுத்தத்தினால் வடக்கு கிழக்கு மக்கள் துவண்டு போயிருக்கின்றனர். அவர்களுக்கான போலியான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக அரச துறையினரை மட்டும் மையப்படுத்தியதாக காணப்படுகின்றன.

உரிமைக்காக போராடிய சிறுபான்மை சமூகத்திற்கு சிங்கள அரசு எதுவும் தராது. வீழ்ந்து கிடக்கின்ற பொருளாதாரங்கள் கட்டியெழுப்பப்படாது என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் மக்கள் தங்களுக்கு கிடைக்கின்ற அரசியல் இலாபங்களை வைத்து தங்களுடைய சமூகத்திற்கு தேவையான ஒன்றை மட்டும் பெற்றுக் கொள்வோம் என்ற நிலையில் பிரிந்து செல்கின்ற நிலைப்பாட்டில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக அவர்கள் கண்ணீர் சிந்தியதும் கிடையாது நல்ல காரியங்களை செய்ததும் கிடையாது.

இவ்வாறான சூழலில் அரசியல் அனாதைகளாக இருக்கின்ற தமிழ் மக்களிடம் “பொங்கு தமிழ்” செய்வோம் அல்லது “எழுக தமிழ்” செய்வோம் “பொங்கல் பானை” வைப்போம் என்று ஆளுக்கு ஆள் கோஷமிட்டுக் கொண்டு விழாக் கொண்டாடுவதிலோ ஆர்ப்பாட்டம் செய்வதிலோ எந்த ஒரு பயனும் ஏற்பட போவதில்லை.

எனவே தான் நம் வரலாற்றை படிக்க வேண்டியவர்களக உள்ளோம். இந்த நாட்டிற்கு ஆரியர்களும் வரவும் இல்லை அவர்கள் ஆட்சி செய்யவுமில்லை. அராபியர்கள் வரவும் இல்லை அவர்கள் ஆட்சி செய்யவுமில்லைரவில்லை.

ஆகவே இந்த நாட்டு மக்கள் பல மொழிபேசி ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆனால் இன்று பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் உண்மைகள் பலருக்கு தெரியாது. வரலாற்றுப் பொய்களை மீண்டும் மீண்டும் கூறி பிரச்சினைகளை பூதகரமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாட்டின் பிரச்சினையை விஞ்ஞான ரீதியில் தீர்க்க வேண்டியது தேவையாக இருக்கின்றது. பிரதமர் மிகவிரைவில் அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவேண்டும். அது மொழி அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்காக அமைய வேண்டும்” என இதன் போது குறிப்பிட்டார்.


Facebook.com/sltnews
Share on Google Plus

About Atm Villu

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment