Wednesday, January 11, 2017

லண்டன் வீதியில் பிணம்!! பெரும் பரபரப்பு…





லண்டனை இணைக்கும் நெடுஞ்சாலையான (மோட்டர் வே) M1ல் இறந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது. மேலும் குறித்த பிணத்தின் மீது சில வாகனங்கள் ஏறி மிதித்தும் சென்றுவிட்டது.

இன் நிலையில் தான் இறந்து கிடப்பபது ஒரு மனித உடல் என ஒருவர் அடையாளம் கண்டு பொலிசாருக்கு சொல்ல. அங்கே குவிந்த பொலிசார் M1 மோட்டர் வேயை முற்றாக மறித்துவிட்டார்கள்.

உடனடியாக தடயவியல் நிபுனர்கள் அங்கே வந்து பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த சடலத்தை யாரோ காரில் இருந்து தள்ளிவிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பொலிசாருக்கு சாட்சி சொல்ல முன் வந்துள்ளார்.

இருப்பினும் எந்தவகையான கார் மற்றும் அதன் உருவம் பற்றியே அவர் சில தகவல்களை கொடுத்துள்ளதாக , ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

ஆனால் இதுவரை பொலிசார் எந்த முடிவையும் எட்டவில்லை. இன் நிலையில் M1 ஊடாக பயணம் செய்யும் பல பயணிகள் காரில் மணித்தியால கணக்கில் என்ன செய்வது என்று தெரியாது தங்கி நிற்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.


Facebook.com/sltnews
Reactions:

0 comments:

Post a Comment